AANGALUKKANA AZHAGU KURIPPU – ஆண்கள் பொலிவுமிக்க மற்றும் தெளிவான சருமத்தைப் பெறுவது எப்படி – ஆண்களுக்கான சரும பராமரிப்பிற்கான குறிப்புகள்

ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே தங்களது அழகைப் பற்றி கவலைகொண்டு பராமரித்து வந்தனர். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில், பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தங்களது சருமத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஆண்களும் பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெற விரும்புகின்றனர். ஆண்கள் அவர்களது சருமத்தை சரியாக பராமரிக்காவிட்டால், வறண்ட சருமமாகவும் பொலிவிழந்தும் காணப்படும்.

ஒவ்வொரு ஆணுக்கும் சவரம் செய்தல் என்பது முக்கியமான ஒன்று. சவரம் செய்து 4 முதல் 5 நாட்களுக்குப் பிறகு முகத்தில் முடி வளர்ந்து விடும். எனAவே சவரம் செய்வதைத் தவறாமல் செய்ய வேண்டும். உங்களது தோற்றத்தைக் கொண்டே ஒவ்வொருவரும் உங்களைத் தீர்மானிக்கின்றனர்.

நீங்கள் உங்கள் சரும பராமரிப்பிற்கான மருத்துவத்தைத் தொடங்குவதற்கு முன், உங்கள் சருமத்தின் வகையைக் கண்டறிய வேண்டும்: எண்ணெய் சருமமா, சாதாரண மற்றும் வறண்ட சருமமா எனக் கண்டறிய வேண்டும். இதைக் கண்டறிந்தால் எவ்விதமான பொருள்கள் உங்கள் சருமத்திற்கு பயன்படுத்தலாம் எனத் தீர்மானிக்கலாம்.

Sleeveless Blouse designs

அனைவரின் கருத்துப்படி, ஆண்கள் மேக்கப் இல்லாமலே அழுகு தான் என்பது, ஆனால் அது தவறு. இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஆணும் பலவித சரும பராமரிப்பை மேற்கொள்கின்றனர்.

சிறந்த தோற்றத்தையும் மற்றும் நீடித்த கவர்ச்சியையும் உங்கள் முகத்திற்கு கொடுப்பதற்கான சில குறிப்புகள் (Here are a couple of tips that will help you look your very best and of course make a lasting impression)

பேஸ் மாஸ்க் (Face masks)

பேஸ் மாஸ்க்குகளை நீங்களே தயார் செய்வது மிக நல்லது. சிட்ரஸ் பழம் மற்றும் எலுமிச்சையில் விட்டமின் C உள்ளது, இது உங்களது சருமத்தை சிவப்பாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது. மேலும் இவை இறந்த சரும அடுக்குகளை நீக்குகிறது. எலுமிச்சை சாறானது உங்கள் தோலின் மெலனின் அளவைக் குறைக்கும் திறனுடையது. இந்த பேக்கை தயார் செய்வதற்கு எலுமிச்சை சாற்றுடன் தேனைக் கலக்க வேண்டும். இதனை உங்கள் முகத்தில் தடவ வேண்டும். எனினும், பருக்களைப் பெற்றிருப்பவர்கள், சிறிது கூச்ச உணர்வைப் பெறலாம்.

இரவில் கிரீம்களைப் பயன்படுத்துங்கள் (Use night cream)

நீங்கள் இரவில் தூங்கச் செல்வதற்கு முன், உங்கள் சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிக்க அதிக தரம் வாய்ந்த கிரீம்களை பயன்படுத்தலாம். நீங்கள் கிரீம்களை வாங்குவதற்கு முன் உங்கள் சருமத்தின் வகையைத் தெரிந்து கொள்வது அவசியம்.

Subscribe to Blog via Email

தோலை வெண்மையாக்கத் தயிர் (Curd to whiten skin)

அழகான சருமத்திற்கு தயிரும் ஒரு முக்கியமான பொருளாகும். சாதாரண மற்றும் வறண்ட தோலை உடையவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். தயிரில் கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது, இவை உங்கள் தோலை சற்று பிசுபிசுப்பாக மாற்றுகிறது. தயிருடன் மஞ்சள் தூளைக் கலந்து தடவி வந்தால், குறுகிய காலத்தில் அழகான சருமத்தைப் பெறலாம்.

ஹெல்மட்டிலிருந்து தோலைப் பராமரித்தல் (Skin protection against helmet)

நீங்கள் வாகனத்தில் செல்லும்போது, ஹெல்மெட் உங்கள் உயிரைப் பாதுகாக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு வாகன ஓட்டியாக, நீங்கள் ஹெல்மெட்டை அணிதல் அவசியமானது. இருப்பினும், தரமான ஹெல்மெட்டாக இல்லாவிட்டால், உங்களது நெற்றி மற்றும் முகம் பாதிப்படைகிறது. ஹெல்மெட்டானது உங்களது தோலில் தொற்று மற்றும் தடிப்புகளை ஏற்படுத்துகிறது. நீங்கள் ஹெல்மெட் மற்றும் தோலுக்கு இடையில் ஒரு சிறிய துணியை வைத்துக்கொள்ளலாம். இது உங்களது சருமத்தைப் பாதுகாக்க உதவும்.

சிறந்த டோனர்களைப் பயன்படுத்தல் (Use the best toner)

நீங்கள் வண்டியை ஓட்டும்போதோ அல்லது காரின் உள்ளே அமர்ந்திருக்கும்போதோ, உங்கள் சருமமானது அதிகப்படியான மாசுக்களால் பாதிப்படைகிறது. அதனால்தான் சருமமானது சிவத்தல் மற்றும் அரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உட்படுகிறது. இதை தவிர்ப்பதற்கு குளுக்கோலிக் அமிலத்தை உடைய டோனர்களைப் பயன்படுத்தலாம். இதனை உங்கள் முகத்தில் தடவினால், நீங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் இருப்பீர்கள்.

ஐஸ் மசாஜ் (Ice massage)

சிறிய ஐஸ் கட்டிகளைக் கொண்டு உங்கள் சருமத்தை மசாஜ் செய்யலாம். இவை உங்கள் சருமத்திற்கு இழந்த பொலிவைத் திருப்பி பெற உதவுகிறது. எனவே, எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ இதனை முயற்சி செய்து தெளிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறுங்கள்.

தினமும் உங்கள் முகத்தை இருமுறை கழுவுங்கள் (Cleanse your face twice daily)

நீங்கள் தினமும் இருமுறை பல் துலக்குவது போல், உங்கள் முகம் மற்றும் சருமத்தை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியமாகிறது. உங்கள் முகத்தில் இருக்கும் நச்சுகள் மற்றும் மாசுக்களை நீக்குவதற்கு காலை மற்றும் மதியம் என தினசரி இருமுறை மிகச்சிறந்த ஊட்டப் பொருள்களை கொண்டு முகத்தை கழுவுதல் வேண்டும். இவை உங்கள் முகத்திற்கு கூடுதல் பொலிவைக் கொடுக்கிறது.

தவறான பழக்க வழக்கங்களைத் தவிர்க்கவும் (Give up bad habits)

ஆண்கள் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற தவறான பழக்கத்திற்கு விரைவில் அடிமையாகி விடுகின்றனர். இவை மிகக் கடுமையாக உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது மற்றும் தோலிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதடுகள் மற்றும் கண்களின் அடிப்பகுதியும் மிகுந்த பாதிப்படைகிறது. புகைபிடித்தல் உங்கள் உதட்டைக் கருப்பாக்குகிறது மற்றும் கண்களின் அடிப்பகுதியில் புடைப்பை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற விரும்பினால் தவறான பழக்க வழக்கங்களைத் தவிர்த்து, ஆரோக்கியம் தரும் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம். மேலும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுதலும் அவசியம்.

அதிக நீரைப் பருக வேண்டும் (Drink a lot of water)

மிக அழகான சருமத்தைப் பெறுவதற்கான ஒரு இரகசியம் அதிகப்படியான நீரைப் பருகுதல். தினமும் 8 கிளாஸ் நீரைப் பருகி வந்தால், அவை நமது உடலில் இருந்து நச்சுக்களை நீக்கி இயற்கையாகவே புத்துணர்வு பெற உதவுகிறது. இந்த வகையில் நச்சுக்கள் நமது உடலில் இருந்து எளிதாக நீங்கி, தெளிவான மற்றும் குறைபாடில்லாத சருமத்தைப் பெறலாம்.

8 மணி நேரத் தூக்கம் சருமத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் (Remember 8 hours of sleep is blissful for skin)

நகர வாழ்க்கை மற்றும் இந்தப் போட்டியான உலகில், நாம் ஓய்வெடுக்க நேரத்தை ஒதுக்கவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும், நீங்கள் வீட்டிற்கு எந்தவொரு வேலையையும் கொண்டு வராமல், 8 மணி நேரத்தை தூக்கத்திற்கு செலவழிப்பது என்பது அத்தியாவசியமான ஒன்று. நிம்மதியான தூக்கத்தினால் உங்கள் திசுக்கள் இரவு முழுவதும் வேலை செய்து கொலாஜென்னை உற்பத்தி செய்து உங்கள் சருமத்தை இறுக்கமாக்குகிறது. 8 மணி நேரத் தூக்கம் உங்கள் திசு செல்களை மறு உற்பத்தி செய்து உங்கள் சருமத்திற்கு அழகூட்டுகிறது.

பொலிவான சருமத்திற்கு பேஸ் பேக் (Glowing skin face pack)

 எல்லாருடைய வீட்டிலும் வாழைப்பழம் இருக்கும். வாழைப்பழத்தை தோலுரித்து நன்றாக அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை உங்கள் முகத்தில் சுமார் 15 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு நீரால் கழுவவும். இவை உங்கள் சருமத்திற்கு கூடுதல் பொலிவைக் கொடுக்கும். மேலும் சருமத்தின் நிறத்தையும் மேன்மைப் பெற செய்யும். இந்த பேஸ் பேக்குடன் தேனையும் கலந்து பயன்படுத்தலாம். இவை ஆண்களின் சரும பராமரிப்புக்கு சிறந்த தீர்வாகும்.

முகப்பருக்களைப் பராமரித்தல் (Treating acne)

இன்றைய உலகில் நிறைய ஆண்கள் முகப்பரு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். பருக்கள் உடைவதனால் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுகிறது. பெண்கள் எவ்வாறு பருக்களால் தங்களது அழகை இழக்கிறார்களோ அதே போல் ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். பருக்கள் வராமல் தடுப்பது என்பது ஆண்களுக்கும் மிக முக்கியமான ஒன்று. முகப்பருவிலிருந்து விடுபட சந்தைகளில் ஏராளமான பொருள்கள் விற்கப்படுகிறது. அதிகமாக, சாலிசிலிக் அமிலத்தை உடைய பொருள்கள் பருக்களைக் குறைக்கிறது.

சரியான உணவை தேர்வு செய்தல் (Choose the food)

நீங்கள் உட்கொள்ளும் உணவும் உங்கள் சருமத்தை தீர்மானிக்கிறது. அதிக மாசுள்ள இடங்களில் விற்கும், அதிக எண்ணெய் மற்றும் காரமுடைய உணவுகளால் உங்கள் சருமமானது பாதிப்புக்குள்ளாகிறது. பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் மட்டுமே நீங்கள் புத்துணர்வுடைய சருமத்தைப் பெற முடியும். இவற்றில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள், விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் இருக்கிறது.

முறையான உடற்பயிற்சி (Proper exercise)

புத்துணர்வோடு இருக்க ஆண்களுக்கு உடற்பயிற்சி என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. உடற்பயிசி செய்வதால் சருமத்தில் உள்ள துளைகள் திறந்து அதன் வழியாக வியர்வை வெளியேறுகிறது. மேலும் இரத்த ஓட்டமானது முறையாக நடைபெற்று சருமம் புத்துணர்வைப் பெறுகிறது. நீங்கள் உங்கள் அழகான சருமத்தை இழந்திருந்தால், தினசரி உடற்பயிற்சி செய்து இழந்தப் பொலிவைத் திரும்பப் பெறலாம்.

loading...