Tamil tips to treat black gums – கருமையான ஈறுகளை சரிசெய்வது எப்படி?

நமது புன்னகையில் மேலும் ஒரு அழகைக் கூட்டுவதில் மிக முக்கிய பங்காற்றுவது நமது ஈறுகள் ஆகும். நிச்சயமாக நம் அனைவரும் அழகான இளஞ்சிவப்பான பல்ஈறுகள் இருப்பதை விரும்புவோம். நமது ஈறுகள் சற்று கருமையாக இருந்தால் ஒரு வித அசௌகரியம் நமக்கு ஏற்படுகிறது. சிரிக்கும்போது கருமையான ஈறுகள் தெரிவதை யாரும் விரும்புவதில்லை.

ஈறுகள் கருமையாகக் காரணம் (What causes dark gums?)

ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில், ஈறுகள் கருமையாவதற்குக் காரணம் ஈறுகளில் மெலலின் படிவதாகும். இப்படி மெலலின் ஈறுகளில் படிந்து மெதுமெதுவாக இளஞ்சிவப்பு நிறமாக இருந்த ஈறுகள் கருமையாக மாற ஆரம்பிக்கும். பொதுவாக வெளியிடங்களில் வேலைபார்ப்பவர்கள் அதிகமாக பிரயாணம் செய்து சூரிய ஔயில் இருப்பவர்கள் ஆகியோர்க்கு இப்படி ஈறுகள் கருமையாகும் பிரச்சனை அதிகமாக இருக்கும். அதேபோல் புகையிலைப் பழக்கம், போதைப் பழக்கம் இருப்பவர்களின் ஈறுகளும் அதிகமாக கருமையாகும். அதேபோல் இயற்கையாக சற் றுகருப்பாக இருப்பவர்களின் ஈறுகள் மேற்புறத்தில் சற்று கருமையாகவும், அடிஈறுகள் இளஞ்சிவப்பாகவும் இருக்கும்.

சில குறிப்பிட்ட நோய் உடலில் இருப்பவர்களுக்கும் இப்படி ஈறுகள் கருமையாக மாறும். அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எச்ஐவி (HIV Aids)

Sleeveless Blouse designs

மிக ஆபத்தாக இந்த எச்ஐவி எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை மிகக் குறைவாக இருக்கும். ஆகையால், பாக்டீரியாக்கள் அதிகமாக உருவாகும். இப்படி உருவான பாக்டீரியாக்கள் ஈறுகளுக்குள்ளும் ஊடுருவி ஈறுகளைக் கருமையாக்கும். ஆகவே, எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருமையான ஈறுகள் இருக்கும்.

அடிசன்ஸ் நோய் (Addisons disease)

முதன்மை அடரினல் குறைபாட்டால் இந்த நோய் வருகின்றது. அட்ரினல் நாளங்களில் சுரக்கும் அல்டோஸ்டிரான் சரியாக சுரக்காத போது இந்த நோய் வருகின்றது. இதனால் ஏசிடி ஹார்மோன் அதிகமாகி பல் ஈறுகள் கருமையாக மாறும்.

ப்யூட்ஜெகர் நோய் (Peutzjeghers disease)

மனித உடலில் குடல்களின் செயல்பாட்டில் பிரச்சனை ஏற்படுவதால் வரும் ஒரு நோய் இது. இது தலைமுறையாகவும் வரும். இந்த நோய் இருப்பவர்களுக்கும் ஈறுகள் கருமையாகக் காணப்படும்.

வோன் ரெக்லிங் நோய் (Von recklinghausen disease)

இந்த நோய் இருப்பவர்களின் உடல் முழுவதுமே கருப்பு புள்ளிகள் இருக்கும். அதேபோல் பற்களின் ஈறுகளிலும் இத்தகைய பாதிப்பு இருக்கும். ஆகையால் ஈறுகள் கருமையாகக் காணப்படும்.

Subscribe to Blog via Email

ஈறுகள் கருமையாவதை எப்படித் தடுப்பது? (How to avoid dark gums?)

மேலே கூறப்பட்டுள்ள நோய்களில் ஏதேனும் ஒன்றினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஈறுகள் கருமையாவதைத் தடுக்க முடியாது. ஆனாலும் சில வழிமுறைகளைப் பின்பற்றினால் இதன்தாக்கத்தைக் குறைக்க முடியும். அவைகளில் சில குறிப்புகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன.

இருமுறை பல்துலக்குதல் (Brush twice daily without fail)

நீங்கள் தினமும் இருமுறை பல்துலக்கவில்லை என்றால் உங்கள் ஈறுகள் கருமையாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதனால் உங்கள் முகப்பொலிவு மந்தமாக இருப்பதைப்போன்று தோன்றும். ஆகையால், ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளிலும் தவறாமல் பல்துலக்க வேண்டும். பல்துலக்கும்போது மிக மெதுவாகவோ அல்லது மிக வேகமாகவோ பல் துலக்கக்கூடாது, மிதமாக செய்ய வேண்டும்.

பற்களுக்கிடையே நூல்விட்டு சுத்தம் செய்தல் (Floss and give your teeth a bright toss)

உங்களுக்குத் தெரியுமா, பற்களுக்கிடையே சிறிய ப்ரத்யோக நூல் கொண்டு சுத்தம் செய்வது பல பற்கள் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும். ஆரம்பமாக சில தடவைகள் வரை பற்களுக்கிடையேயிருந்து இரத்தம் கசியலாம். இது சாதாரண ஒன்றுதான். ஆனால், தொடர்ந்து இப்படி நூல்கொண்டு பற்களுக்கிடையே சுத்தம் செய்து வரும்போது பற்களும் ஈறுகளும் வலிமையடைகிறது.

கார்போனேட் குளிர்பானங்கள் தவிர்த்தல் (Avoid carbonated beverages)

இன்று சந்தைகளில் கிடைக்கும் பெரும்பாலான குளிர்பானங்கள் என்பவை கார்போனேட் கலந்த குளிர்பானங்கள்தான். மக்கள் இன்று தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இந்த கார்போனேட் குளிர்பானங்களைத்தான் குடிக்கிறார்கள். இந்த குளிர்பானங்களில் இருக்கம் கார்பன் துகள்கள் பற்களின் எனாமல் உடன் வினை புரியும். நாளடைவில் பற்ஈறுகள் கருத்துவிடும்.

புகையிலையைத் தவிர்த்தல் (Abandon tobbaco)

புகையிலையைத் தவிர்ப்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். புகையிலையைத் தவிர்ப்பது வெறும் ஈறுபிரச்சனைக்ககாக மற்றுமின்றி முழு உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நுரையீரலைப் பாதித்து, புற்றுநோய் வரக் காரணமான மிகக் கொடிய பழக்கம் இந்த புகையிலைப் பழக்கம். தொடர்ந்து புகையிலைப் பயன்படுத்துபவர்களின் ஈறுகள் நிச்சயம் கருத்துப்போகும்.

மதுவைத் தவிர்த்தல் (Cut down alcohol consumption)

மதுவில் முக்கிய வேதிப்பொருள் எத்தனால் இது சிறுநீரகம் மற்றும் கல்லீரலை வெகுவாகப் பாதிக்கும். வழக்கமாக ஒருவர் மது சாப்பிட்டுவந்தால் பல் ஈறுகள் கண்டிப்பாக கருமையாக மாறும்.

பெரும்பாலான நேரங்களில் முறையாக வாய், பற்களை பராமரிக்கமால் இருப்பது மற்றும் மோசமான வாழ்க்கைமுறைகளால் இப்படி ஏற்படுகிறது. ஈறுகள் கருமையாவதற்கு இருக்கும் பல்வேறு காரணங்களில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • பரம்பரை
  • புகைபிடித்தல்
  • மனஅழுத்தம்
  • வாயை முறையாக பரிமரிக்காதநிலை
  • குறைபாடான ஊட்டச்சத்து
  • டார்டர் அல்லது ப்ளாக் உருவாக்கம்

சில நேரங்களில் எதிர்பாராத விதமாக நமது ஈறுகள் சாம்பல் நிறத்திற்கு மாறிவிடும். இதற்கு காரணம் சில்வர் அமல்கம் நமது ஈறு தசையில் படிவது. இதற்கு மருத்துவர்கள் அமல்கம் டாட்டுஸ் என்று கூறுகின்றனர்.

சில வாழ்க்கைமுறை மாற்றங்கள்:

  • ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குதல்.
  • மிதமான வெந்நீரில் உப்பு போட்டு கொப்பளிப்பதை வழக்கமாக செய்ய வேண்டும்.
  • புகை பிடித்தலை அறவே நிறுத்த வேண்டும் மற்றும் புகையிலை மெல்லும் பழக்கத்தையும் விட வேண்டும்.
  • முறையான வகையில் அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ள உணவாக எடுக்க வேண்டும்.
  • மனஅழுத்தம் போன்றவைகளுக்கு இடம் தரக்கூடாது.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெற்று பற்கள்மற்றும் ஈறுகளில் ஏதும் பிரச்சனை உள்ளதா என்பதை அறிந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் சில காரணங்களுக்காக ஈறுகள் கருமை அடைகின்றது. இவை பல் மருத்துவரின் முறையான சிகிச்சை மூலமாகத்தான் சரி செய்ய முடியும்.

  • வாய் கிருமி பாதிப்பு
  • ஈறுகளில் இறந்த செல்கள்
  • கருமை ஈறு நோய்
  • எயிட்ஸ்
  • உள்ளார்ந்து இரத்தம் வடிதல்
  • மலிங்னட் மெலானோமியா

இத்தகைய நிலைகள் இருந்தால் இது மோசமான ஆரோக்கியமற்ற தன்மையாகும். உடனே பல் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். அத்தகைய சிகிச்சைக்குப் பின்னும் ஈறுகளின் கருமை நீங்கவில்லை எனில் பாதிப்படைந்த தசைகள பெரியோடோனிஸ்ட் நிபுணர்கள் மூலமாக நீக்க வேண்டும். பல நேரங்களில் ஆக்ஸிஜன் தெரபியும் கருமையான ஈறுகளைச் சரி செய்ய கொடுக்கப்படுகிறது.

ஈறுகளை எவ்வாறு இளஞ்சிவப்பாக மாற்றுவது? (How to make gums pink?)

முறையான பராமரிப்பு மற்றும் சுத்தமாக வாயை வைத்திருப்பது மிக அவசியம். உங்கள் வாழ்க்கை முறையில் தினசரி செயலாக சிலவற்றைப் பின்பற்ற வேண்டும் அதனால் ஈறுகள் இளஞ்சிவப்பாக இருக்கும்.

பற்பசை (Toothpaste)

நல்ல தரமான பற்பசகளை வாங்கி பயன்படுத்தவேண்டும். சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஈறுகளின் நலன்கருதி பணம் செலவழிப்பதில் தவறில்லை.

பல்குச்சி (Toothbrush)

நீங்கள் வாங்கும் பல்குச்சியில் அமெரிக்க பல் மருத்துவக் கழக முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்கலாம். அத்தகைய பல் குச்சிகள் தரமானதாக இருக்கும்.

  • வாய் முழுவுதும் எளிதில் நுழைந்து செல்லும் வகையிலானதாக இருக்க வேண்டும்.
  • கடினமான தூரிகைகள் இருக்கும் பல்குச்சியாக இருக்கக்கூடாது.
  • மென்மையான பல்குச்சியாக இருக்கவேண்டும்.
  • பிரிஸ்டில்ஸ் வட்டவடிவில் இருக்க வேண்டும்.
  • மின் பல்குச்சிகள் தற்போது கிடைக்கின்றன. அவைகளையும் பயன்படுத்தலாம்.

இரண்டு உணவிற்கிடையே பல்துலக்குதல் (Brush before two meals)

பொதுவாக உணவு உண்ட பின் பல் துலக்குவோம். ஆனால் பல் மருத்துவர்கள் இதற்கு மாறாக சாப்பிடும் முன் பல்துலக்க அறிவுறுத்துகிறார்கள்.

குறைந்த பட்சம் இரண்டு முறை பல்துலக்க வேண்டும்.

பல்துலக்கும் நேரஅளவு (Time frame)

சிலபேர் அவசர அவசரமாக பல்துலக்குவார்கள். இது தவறு, குறைந்தது 2 நிமிடங்கள் பல் துலக்க வேண்டும். மொத்த வாய் உள் பகுதியையும் 4 பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் 30 வினாடிகள் துலக்கவேண்டும். வாயின் எல்லாாப் பகுதிகளிலும் பல்குச்சி சென்று சுத்தம் செய்ததை உறுதிப்படுத்த வேண்டும்.

அதிகமாக பல்துலக்குதல் (Don’t overdo)

ஒருநாளைக்கு 3தடவைக்கு மேலாகவும் பல்துலக்கக்கூடாது. இதனால் பல் ஈறுகள் பாதிப்படையலாம். 3 மாதத்திற்கு ஒரு முறை பல்குச்சியை மாற்றிவிட வேண்டும்.

பல் சுத்தம் செய்யும் நூல் (Use floss)

இத்தகைய நூல்கள் பல வகைகளில் மருந்துக் கடைகளில் கிடைக்கின்றது. நைலான் வகையிலிருந்த மோனோபிளமென்ட் வரை பல வகைகளில் உள்ளது. உங்களுக்குப் பிடித்தமான ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள்.

  • தினமும் ஒருதடவை இந்த நூல் கொண்டு சுத்தம் செய்யுங்கள்
  • பல்துலக்குவதை விட இப்படி நூல்முறை சுத்தம் அதிக பலன்தரும்.
  • ஆரம்பத்தில் இப்படி சுத்தம் செய்யும்போது இரத்தம் வரலாம். அதற்காக நிறுத்த வேண்டாம் நாளடையவில் இரத்தம் நின்றுவிடும்.

வாய் கொப்பளிக்கும் திரவம் (Use a mouthwash)

வாய் கொப்பளிப்பதென்கென்றே சில மருத்துவ திரவங்கள் கடைகளில் கிடைக்கின்றன.இப்படி கொப்பளிக்கும்போது முழு வாயும் சுத்தமடைகிறது. ஈறுகளுக்கு ஆரோக்கியம் தரும் திரவமாக வாங்க வேண்டும் வெறுமென வாய் மணக்கும் திரவமாக இருக்கக்கூடாது. ஆல்கஹால் உள்ள திரவங்களை வாங்குவதைத் தவிர்க்கலாம்.

பல்துலக்கிற உடனே இத்தகைய திரவங்களை வைத்து வாய் கொப்பளிக்கக்கூடாது.

கீழ்க்கண்ட சில அறிகுறிகள் உடனடி மருத்துவ சிகிச்சைக்கானவை

  • வீங்கிய / சிவப்பான ஈறுகள்
  • சாதாரண அளவு விட அதிக இரத்தம் வருதல் நூல் சுத்தம் செய்யும்போது
  • பற்கள் தளர்வாகுதல்
  • மோசமான வாய் துர்நாற்றம்

வழக்கமான மருத்துவ பரிசோதனை (Regular checkup)

வீட்டிலேயே உங்கள் பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வழிகளை நீங்கள் பின்பற்றினாலும், வழக்கமாக ஒரு நல்ல பல் மருத்துவரை அணுகி அவ்வப்போது பரிசோதனைகள் செய்து கொள்ளவேண்டும்.

இயற்கை முறைகள் (Natura remedies for pinking gums)

எண்ணைய் கொப்பளிப்பு (Oil pulling)

நெடுங்காலமாக பின்பற்றப்படும் ஒரு வழக்கம் இந்த எண்ணைய் வைத்து கொப்பளிக்கும் முறை. தேங்காய் எண்ணைய் அல்லது நல்லெண்ணைய் வைத்து வாயை கொப்பளிக்க வேண்டும் எண்ணையை விழுங்கிவிடக் கூடாது. 20 நமிடங்கள் வரை வாய் கொப்பளிக்க வேண்டும். இது பலவகைகளில் வாய் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

கடல் உப்பு (Use of sea salt for pink gums)

தேங்காய் எண்ணைய் ஒரு தேக்கரண்டி மற்றுமு் 2 தேக்கரண்டி கடல் உப்பு கலந்து ஈறுகளில் முழுவதும் தடவி சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளித்து கழுவிக் கொள்ள வேண்டும்.

loading...